Tuesday, January 13, 2026 9:36 am
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படைய தளத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

