Monday, January 12, 2026 2:25 pm
பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை சமப்படுத்தியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்தது. இந் நிலையில் தம்புள்ளயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மூன்றாவது போட்டியை இலங்கை வென்றதைத் தொடர்ந்து 1-1 என்ற ரீதியில் தொடரை இலங்கை சமப்படுத்தியது.
மழை காரணமக 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 12 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 161 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 12 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களையே பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் வனிது ஹசரங்க தெரிவானார்.


