Monday, January 12, 2026 10:04 am
புத்தளம் முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்தால் கார் மற்றும் வேனின் முன் பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

