Friday, January 9, 2026 11:20 am
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றதோடு, முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளிலும் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
வடபகுதி மீனவர்கள் சீரற்ற வானிலையினால் கடல்த் தொழில்களுக்குச் செல்ல முடியாது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, இந்திய மீனவர்களின் இந்த நடவடிக்கை மேலும் அவர்களை மோசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

