Thursday, January 8, 2026 12:05 pm
ரோக்கி ஸ்டார் யாஷின் பிறந்தநாள் இன்று ஆகும். அவரது 40 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வெளிவரவுள்ள அவரது அடுத்த திரைப்படமான டாக்ஸிக்கின் டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளனர்.

அதிரடி ஆக்ஷன் நிறைந்ததாக இந்த டீசர் காணப்படுகின்றது.
2 நிமிடம் 51 வினாடிகள் கொண்ட இந்த டீஸர் யாஷை ராயா வேடத்தில் அறிமுகப்படுத்துகிறது.
யாஷ், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் 2026 மார்ச் 19 வெளியாக உள்ளது.

