Thursday, January 8, 2026 11:24 am
நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது.
தம்புள்ளையில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
129 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

