Wednesday, January 7, 2026 4:02 pm
2026ம் ஆண்டுக்கான T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையைப் பலப்படுத்தும் நோக்கில் புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகச் செயற்பட்டு வருகின்றார்.
அவர் ஜனவரி 15ம் திகதி இலங்கை அணியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விக்ரம் ரத்தோர் 2024 ம் ஆண்டு வரை இந்தியத் தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

