Wednesday, January 7, 2026 12:36 pm
பங்களாதேஷ் அணியின் T-20 உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும், குறித்த போட்டிகளை நடத்துவதற்கு இதுவரை எந்தவித அச்சுறுத்தல்களும் கண்டறியப்படவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜனவரி 10ம் திகதிக்கு முன்னர் எடுக்கப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு குழு (ICC) மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் குழுக்கள் முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

