Wednesday, January 7, 2026 12:39 pm
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவரது மனைவி திருமதி சுனிதா திவேதி ஆகியோர் இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி இலங்கையின் சிரேஷ்ட இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துதல் , இரு இராணுவங்களுக்கும் இடையிலான பயிற்சிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் , பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் சவால்கள் குறித்து ஆராய்தல் போன்றவை இவற்றின் முக்கிய நோக்கங்களாக காணப்படுகின்றன.
இராணுவத் தளபதியின் இந்த இலங்கை விஜயம் இந்திய நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக காணப்படுகின்றது.

