Tuesday, January 6, 2026 12:03 pm
அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கணவர் மது அருந்தும் பழக்கத்தை கொண்டவர் எனவும், இதனால் அடிக்கடி மனைவியைத் தாக்குவது தொடர்பாக பொலிஸாருக்கு பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகராறுகள் காரணமாக மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் கணவர் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் தந்தையும் மகள் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய், இரண்டு பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 வயது மகள் மற்றும் 20 வயது மகன், 66 வயது பாட்டி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

