Friday, January 2, 2026 2:15 pm
விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ஜனநாயகன் திரைப்பட்ம் ஜனவரி 9ம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் திரைப்படம் வெளியிடுவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் முன்பதிவுகளில் இதுவரையில் ரூ. 18.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் மட்டுமே முன்பதிவுகள் விற்பனை தொடங்கியுள்ளது. அதில் 3 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

