Friday, January 2, 2026 1:32 pm
பெர்க்சயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான வாரன் பபெட் தனது 94 வயதில் நேற்று ஓய்வு பெற்றுள்ளார்.
உற்பத்தியில் வீழ்ச்சி கண்டிருந்த ஆடை உற்பத்தி நிறுவனமொன்றை 1.16 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் முதலீட்டு நிறுவனமாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.
இவர் உலகின் தலைசிறந்த வெற்றிகரமான முதலீட்டாளராக மட்டுமல்லாமல் தனது மூளையை முதலீடாக கொண்டு இருந்த இடத்தில் இருந்தே கோடிகளை அள்ளும் திறமை வாய்ந்தவராகவும் காணப்பட்டார்.
முதலீட்டாளரான வாரன் பபெட் பங்குச் சந்தை உலகின் தந்தையாக விளங்குவதோடு , கடந்த 2025ம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 160 -169 பில்லியன் அமெரிக்க டொலர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவரது ஓய்வுக்குப் பின் அவரது பொறுப்புகள் அனைத்தும் கிரெக் ஏபல்லிடம் (Greg Abel) ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

