Friday, January 2, 2026 11:16 am
சுவிட்சர்லாந்தில் உள்ள மதுபான விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு சுவிட்சர்லாந்தில் ஒரு ஸ்கை ரிசார்ட்டில் உள்ள மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 01:30 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் மேலும் 115 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணங்கள் வெளியிடப்படாத போதும், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

