Friday, January 2, 2026 10:45 am
சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.
39 வயதான கவாஜா இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 16 சதங்கள் உட்பட 6206 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 9 T20 போட்டிகளில் விளையாடியுள்ள கவாஜா 241 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
எனது சொந்த விருப்பத்தின் பேரில் கௌரவமான முறையில், எனக்குப் பிடித்தமான சிட்னி மைதானத்தில் விடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன் எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை ஓய்வு பெறுவது குறித்து யோசித்ததாகவும் கவாஜா தெரிவித்துள்ளார்.
சிட்னி டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் பிபிஎல் தொடரில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாகவும் கவாஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

