Friday, January 2, 2026 10:30 am
மேற்கு ஆப்பிரிக்காவில் அக்ராவிலுள்ள இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் எனக்கூறி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்திய காரணத்தால் கானா பொலிஸின் இணையவழி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை தீர்க்கதரிசி எனக் கூறிக்கொண்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியமையே கைதுக்கு காரணம் என கூறப்படுகின்றது.
எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய மரக் கப்பலை கட்டும் வீடியோக்கள் வைரலாகி உலக அளவில் பிரபலமானார்.

