Wednesday, December 31, 2025 4:33 pm
உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே திகதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.
அதன்படி உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிறிஸ்மஸ் தீவு. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிறிஸ்மஸ் தீவில் 2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கின்றது. அவுஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன.
உலகிலேயே கடைசியாக அமெரிக்காவுக்கு அருகிலுள்ள மக்கள் வசிக்காத பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் புத்தாண்டு பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

