Wednesday, December 31, 2025 4:00 pm
2026ம் ஆண்டு வானில் ஒரு கண்கவர் வானியல் நிகழ்வு நடக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கமைய ஜனவரி 2ம் திகதியும் ஜனவரி 4ம் திகதியும் சூரியன் மறையும் நேரத்தில் கிழக்கு அடிவானத்தை நோக்கிப் பார்க்குமாறு வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஆண்டின் முதல் முழு நிலவு ‘ஓநாய் நிலவு’ என்றும், சூப்பர் மூன் என்பது சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது ஏற்படும் முழு நிலவு என்றும் கூறப்பட்டுள்ளது.
நாசாவின் கூற்றுப்படி, அந்நாளில் சந்திரன் சாதாரண முழு நிலவை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும் என தெரிவிக்கப்படுகிறது. நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதை வட்ட வடிவில் இல்லாமல் நீள்வட்ட வடிவில் உள்ளது.
இதில் பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிலையை ‘பெரிஜி’ (Perigee) என்று அழைப்பர். இச் சூப்பர் மூனைக் வெறும் கண்களாலேயே தெளிவாக பார்க்க முடியும்.
ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு சூப்பர் நிலவுகள் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவை நவம்பர் 24, 2026 அன்று நிகழும் பீவர் சூப்பர்மூன் மற்றும் டிசம்பர் 24, 2026 அன்று நிகழும் கோல்ட் சூப்பர்மூன் ஆகும்.
இந்த இயற்கையின் அழகை அனைவரும் ஜனவரி 3ம் திகதி இரவு பார்த்து ரசிக்குமாறு வானியியலாளர்கள் கேட்டு கொள்கின்றனர்.

