Tuesday, December 30, 2025 12:51 pm
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்த வேலை காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
வழமையான பராமரிப்புப் பணி காரணமாக கடந்த நவம்பர் மாதம் 3ம் திகதி ஒரு இயந்திரம் நிறுத்தப்பட்டதோடு , கடந்த 20ம் திகதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மற்றுமொரு இயந்திரமும் செயலிழந்தது என மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக 600 மெகாவாட் மின் கொள்ளளவு இழக்கப்பட்டு , 300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேசிய கட்டமைப்பிற்கு இணைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அந்த இரண்டு இயந்திரங்களினதும் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதுடன் , ஜனவரி மாதம் முதலாம் வாரத்திற்குள் அவற்றை மீண்டும் மின் உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீர் மின் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால் நாளாந்த மின் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

