Monday, December 29, 2025 2:38 pm
கொழும்பில் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த நீ-யோவின் இசை நிகழ்ச்சி எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக இரத்து செய்யப்பட்டதனால் சர்வதேச R&B நட்சத்திரம் நீ -யோ தனது இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதற்காக அவர் “மன்னிப்பு” கோரியதுடன் , விரைவில் இலங்கைக்குத் திரும்புவார் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
15000 ரூபாய்க்கும் அதிகமான விலையில் டிக்கெட்டுகளை விற்று பெரும் வருமானத்தை ஈட்டிய பின்னர் , சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னணியில் , நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

