Monday, December 29, 2025 1:51 pm
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (27) மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் , எச்.வினோத் உட்பட இன்னும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ் இசைவெளியீட்டு விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய் , கடந்த 33 ஆண்டுகளாக ரசிகர்கள் தனக்குப் பலவற்றைத் தந்து , தான் நினைத்ததை விடப் பெரிய கோட்டையைக் கட்டிக் கொடுத்துள்ளனர் எனவும் , தனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த அவர்களுக்காக , தான் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.
மேலும் மக்களுக்கு வெறும் நன்றி மட்டும் கூறாது , அடுத்த 33 ஆண்டுகளை மக்களுக்காகவே அர்ப்பணிக்கப் போவதாகவும் , அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்காக நின்று நன்றிக்கடனைத் தீர்ப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“விஜய் தனியாக வருவாரா அல்லது கூட்டணியாக வருவாரா எனப் பேசுகிறார்கள். நான் எப்போது தனியாக இருந்தேன் ? 33 வருடங்களாக மக்களுடன்தானே இருக்கிறேன் , அதுவே ஒரு பெரிய அணிதானே” என நடிகர் விஜய் குறித்த நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

