Monday, December 29, 2025 12:48 pm
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரச் சுட்டெண் 56-134 க்கு இடையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக யாழ்ப்பாணம் , புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகின்றது எனத் தெரிய வந்துள்ளது.
அதிகபட்ச மாசுள்ள காற்று காலை 8.00 – 9.00 மணி முதலும் மாலை 4.00 – 5.00 மணி வரையிலும் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது
அத்துடன் மாசு அதிகம் உள்ள நேரங்களில் இயலுமானவரை வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் , தேவையேற்படின் முகக்கவசம் அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

