Monday, December 29, 2025 10:43 am
இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை இன்று (29) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப் புதிய திட்டத்தை இன்று காலை 9 மணியளவில் தொழிலாளர் அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இதன் மூலம் உறுப்பினர்கள் இனிவரும் காலங்களில் டிஜிட்டல் முறையில் தங்களுடைய பதிவுகளை எளிதாக பதிவு செய்து கொள்ள முடியும் .
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழியர்களின் நலன்களை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக காணப்படுகின்றது.

