Monday, December 29, 2025 10:44 am
கடந்த ஜனவரி 16ம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பு இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும் , மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து நேற்று (28) தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு பிரதான சந்தேகநபர் உட்பட அவருக்கு உதவியளித்த ஒருவரையும் கைது செய்யுள்ளனர்.
இதன்படி கிடைத்த தகவலின் அடிப்படையில் , தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஒரு விடுதியில் மறைந்திருந்த நிலையில் , சந்தேக நபர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்யப்பட்டனர்.
மேலும் , அவர்களிடமிருந்து ஒரு உயிருள்ள கையெறி குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் , அவர்கள் உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

