Saturday, December 27, 2025 2:56 pm
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று வெள்ளிக்கிழமை குடையை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றிய விவகாரமானது பேசுபொருளாகியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குடையை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

நாட்டின் அடையாளமாகவும், மதிக்கப்படவேண்டிய ஒன்றாகவும் அனைவராலும் பார்க்கப்படும் தேசியக் கொடியை அதற்குரிய மரியாதை கொடுத்து ஏற்றாத விடயம் பலர் மத்தியிலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

