Saturday, December 27, 2025 1:04 pm
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று சனிக்கிழமை ஒரு பவுண் தங்கம் ஆறாயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளது.
நேற்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்று 362,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் 335,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 20 ஆம் திகதி 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்று 362,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இலங்கையில் தங்கத்தின் விலை 22000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

