Saturday, December 27, 2025 12:09 pm
2025ம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பூஸாவில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து , கடந்த 22 , 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் , சிறைச்சாலையின் அவசர கால மற்றும் தந்திரோபாயப் பிரிவினரும் இணைந்து விசேட தேடுதலினை மேற்கொண்டனர்.
இதன்போது , கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் சமிது தில்ஷானின் அறையிலிருந்தும் ஒரு தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 84 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளில் மொத்தம் 159 சிம் அட்டைகள் , 110 சார்ஜர்கள் மற்றும் இணைய வசதிக்கான ரவுட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறையில் இருந்தவாறே கையடக்கத் தொலைபேசி ஊடாக குற்றச் செயல்களை இவர்கள் நிகழ்த்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து விசாரணை அதிகாரிகள் , ஊழல் நிறைந்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இவை சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.


