Saturday, December 27, 2025 11:16 am
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பொதுமக்கள் அனைவரும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் , 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கும் , 527,000 சிறுவர்களுக்கும் மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது என ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் பசி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதாகவும் , சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல குடும்பங்கள் உணவைக் குறைப்பது போன்ற சில உத்திகளை கையாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பின்மை என்பது வெறும் உணவுப் பற்றாக்குறை மட்டுமல்ல , பொருளாதார , சமூக மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த சிக்கல்களின் பிரதிபலிப்பாகும்.
குறுகிய கால உதவிகளுடன் நிலையான உணவு முறைகளை உருவாக்குவதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும்.

