Friday, December 26, 2025 12:32 pm
நுவரெலியாவின் ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா “டித்வா” புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இப் பூங்காவிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தமது பொழுதை உல்லாசமாக கழித்து வருவது வழக்கமாகும்.
இதன்படி , தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த தாவரவியல் பூங்கா மீண்டும் நேற்று வியாழக்கிழமை (25) திறக்கப்பட்டது.
இப் பூங்கா திறக்கப்பட்டு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் சென்று தமது பொழுதைக் கொண்டாடி மகிழ்ந்தாலும் , அபாயகரமான அறிகுறிகள் தென்பட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் பிரவேசிப்பது அபாய எச்சரிக்கை பலகைகள் மூலம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை , உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தாவரவியல் பூங்கா ஊழியர்களால் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் , இங்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காக அதிக ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


