Wednesday, December 24, 2025 4:33 pm
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய (24) நாளை ஒரு மறக்க முடியாத நாளாக பீகார் அணி பதிவு செய்துள்ளது.
விஜய் ஹசாரே கிண்ணத் தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.
இதன்படி லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச அணி ஓட்டங்கள் என்ற உலக சாதனையை பீகார் அணி படைத்துள்ளது.
இதற்கு முன் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அணி 506 ஓட்டங்களைக் குவித்த சாதனையை பீகார் அணி இன்று முறியடித்துள்ளது.
இப்போட்டியில் மற்றொரு பிரமிக்க வைக்கும் சாதனையாக, சகிபுல் கனி வெறுமனே 32 பந்துகளில் சதம் விளாசினார்.
இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களைக் குவித்து அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சரித்திரத்தை அவர் படைத்தார்.
மேலும் 14 வயதான வைபவ் 190 ஓட்டங்களை விளாசி, மிக இளைய வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைத் தன்வசப்படுத்தினார்.
இவ்வாறு , இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமல்லாது, உலக கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு மறக்க முடியாத நாளை பீகார் அணி இன்று (24) பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

