Wednesday, December 24, 2025 10:18 am
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு ஏற்படக்கூடிய வாகன நெரிசலைக் குறைப்பதற்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு நகரின் கோட்டை , மருதானை , கொள்ளுப்பிட்டி , புறக்கோட்டை , கொம்பனித்தெரு ,கறுவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய பிரிவுகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது கொழும்பு நகரின் நடைபாதைகள் மற்றும் பிரதான வீதிகளை மறித்து எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் அவ்வாறு வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் , இன்று புதன்கிழமை (24) இந்தப் பிரிவுகளில் வழமை போன்று போக்குவரத்து நடைபெறும் எனவும் வாகன நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவசியத்துக்கேற்ப மாற்று வீதிகள் பயன்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக முன்னெடுக்கப்படும் இந்தக் கடமைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை பொலிஸார் தொடர்ந்து எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

