Tuesday, December 23, 2025 1:44 pm
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.
புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் போக்குவரத்து விதியை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

