Tuesday, December 23, 2025 12:53 pm
கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள நுகேகொடையில் நேற்று திங்கட்கிழமை (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சிசிரிவி பதிவுகள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொடை சந்திக்கும் கொஹுவளை சந்திக்கும் இடையிலான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த அடையாளம் தெரியாத இருவரால் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகியுள்ளான்.
குறித்த 25 வயதுடைய இளைஞன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கொஹுவலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

