Tuesday, December 23, 2025 10:34 am
மெக்சிகோவிற்குச் சொந்தமான மருத்துவ சேவை விமானம் ஒன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கல்வெஸ்டன் விரிகுடா அருகே விபத்துக்குள்ளாகி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து பனிமூட்டம் காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த விமானம் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முகாம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக பயணித்தது என மெக்சிகோ கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் 8 பேர் இருந்ததாகவும் , அவர்களில் நால்வர் மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் , ஏனைய நால்வர் பொதுமக்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் , உயிரிழந்தவர்களில் இரண்டு வயது சிறுமி ஒருவரும் அடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த 8 பேரில் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் , காணாமல் போன மற்றுமொரு நபரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

