Tuesday, December 23, 2025 10:01 am
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.
இதனை , ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் , இந்த அறிவிப்பை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைவாக , லஞ்ச் சீட் பாவனைக்கு மாற்றீடாக தாமரை இலை , வாழை இலை , தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய பேப்பர் மற்றும் உணவு பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

