Monday, December 22, 2025 4:45 pm
அஜித்குமாரின் ரேஸிங் தொடர்பாக ஒரு பிரம்மாண்ட ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் உருவாக்கி வருகின்றார்.
அண்மையாக டுபாய், பெல்ஜியம் மற்றும் பார்சிலோனா போன்ற நாடுகளில் அஜித் பங்கேற்ற கார் பந்தயங்கள், அங்கு அவர் மேற்கொண்ட பயிற்சிகள் மற்றும் ‘அஜித் குமார் ரேசிங்’ (AKR) அணியின் செயற்பாடுகள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
“Racing Isn’t Acting” என்ற பெயரில் குறித்த ஆவணப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் பந்தயக் களத்தில் அவர் சந்தித்த சவால்கள், சமீபத்தில் டுபாயில் நடந்த சிறு விபத்து மற்றும் அதிலிருந்து மீண்டு வந்து அவர் படைத்த சாதனைகள் போன்ற விடயங்களும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் இயக்குநர் ஏ.எல்.விஜய், அஜித் பங்கேற்கும் பந்தயக் களங்களுக்கு நேரில் சென்று காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார்.
அஜித்தின் விடாமுயற்சியையும், விளையாட்டு மீதான அவரது அர்ப்பணிப்பையும் உலகிற்குச் சொல்லும் விதமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் குமார் சினிமாவில் எந்த அளவுக்குப் புகழ்பெற்றவரோ , அதே அளவுக்கு கார்ப்பந்தயத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

