Monday, December 22, 2025 3:17 pm
மாலைதீவில் உள்ள அரச பாடசாலைகளில் மாணவர்களின் கையடக்க தொலைபேசிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை மாலைதீவு ஜனாதிபதி முஹமட் முய்சு அறிவித்துள்ளார்.
அதன்படி 15 வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு தொலைபேசிகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஒரு மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி வெளியானதைத் தொடர்ந்தே இந்த கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தொலைபேசிகளை எடுத்து வர அனுமதிக்கப்பட்டாலும் ,கற்றல் நேரங்களில் அவற்றை பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் இந்த விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

