Monday, December 22, 2025 2:31 pm
கடந்த சில நாட்களாகப் பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் எதிர்காலத்தில் மழை பெய்யக்கூடும் என்பதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு முன்னெச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்காக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை (Red Alert) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர , மெததும்பர மற்றும் மினிபே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் , நுவரெலியா மாவட்டத்தின் மத்துரட்ட , ஹங்குரன்கெத நில்தண்டஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மூன்றாம் கட்ட வெளியேற்றல் சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
குருநாகல் ,பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க , பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் , ஆபத்து உள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அதிகரித்த விழிப்புணர்வைப் பயன்படுத்துவதன் மூலம் பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

