Monday, December 22, 2025 10:55 am
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ மட்டங்களில் பதிவாகியுள்ளது.
கடந்த 20 (சனிக்கிழமை) மற்றும் 21 (ஞாயிற்றுக்கிழமை) காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ மட்டங்களில் இருந்ததாக ‘ IQAir ‘ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆரோக்கியமற்ற காற்று அளவுகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.
இதற்கமைய , கொழும்பு மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் கடந்த சனிக்கிழமை (20) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (21) 150 ஐத் தாண்டி சிவப்பு நிறத்தைக் குறித்தது.
அதன்படி , கொழும்பில் காற்றின் தரம் மாளிகாவத்தையில் 173 ஆகவும் , பெலவத்தையில் 167 ஆகவும் , நுகேகொடையில் 165 ஆகவும் இருந்தது.
நேற்று (21) யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் 190 ஆகக் காணப்பட்டதோடு , சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது.
மேலும் புத்தளம் 165 , மிஹிந்தலை 173 , குருநாகல் 169 , கிளிநொச்சி 184 , திருகோணமலை 187 , அம்பாறை 165 , சிலாபம் 186 , அனுராதபுரம் 173 மற்றும் மட்டக்களப்பு 157 என பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எல்லை கடந்த காற்று இயக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் , அவசியம் ஏற்படுமாயின் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர் .

