Saturday, December 20, 2025 3:40 pm
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின்போது சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி நேற்று கைது செய்யப்பட்டார்.
துவார பாலகர் சிலைகளில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்கத்தை கர்நாடகாவின் பெல்லாரியை சேர்ந்த ஜூவல்லரி உரிமையாளர் கோவர்தன் வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

