Saturday, December 20, 2025 3:10 pm
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் முக்கிய அரிசி உற்பத்திப் பகுதிகளான சம்பா , கீரி சம்பா போன்ற அரிசி வகைகளின் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அழிவடைந்த நெற்காணிகளில் மீண்டும் பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்பட்டால் , சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது .
அத்துடன் சம்பா மற்றும் கீரி சம்பா நெல்லின அறுவடைக்கு நான்கு மாதங்கள் எடுக்கும்.
ஆனால் , தற்போது மறுபயிரிடுவதற்கு மூன்றரை மாத கால எல்லைக்குள் பலன் தரக்கூடிய சம்பா அல்லது கீரி சம்பா விதை நெல்லினங்கள் கைவசம் இல்லை எனவும் நெற்செய்கை மாத்திரமன்றி சோளம் , நிலக்கடலை மற்றும் பச்சை மிளகாய் போன்ற ஏனைய பயிர்களும் ஹெக்டேயர் அளவில் பாரியளவு சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, சோளம் போன்ற பயிர்களை மீண்டும் இந்த பருவத்தில் பயிரிட முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

