Saturday, December 20, 2025 1:31 pm
வட இந்தியா முழுவதும் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 66 விமானங்களும், அங்கிருந்து புறப்படவிருந்த 63 விமானங்களும் இவ்வாறு ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூடுபனி தொடர்ந்தும் நீடித்துள்ளதால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கான ஆலோசனை ஒன்றை வெளியிட்டது. விமானங்கள் பற்றிய தகவல்களைப் பெற அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு விமான நிலையம் இன்று பயணிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
மூடுபனி காரணமாக விமானத்தை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக பல விமான சேவைகள் தாமதமாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

