Saturday, December 20, 2025 1:22 pm
இலங்கையை தாக்கிய “டித்வா” புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று காலை 8.00 மணிக்கு ‘Class S14’ வலுச்சக்தி தொகுதியைக் கொண்ட பதுளை – அம்பேவெல விசேட ‘உடரட்ட மெனிகே’ ரயில் தனது பயணத்தை ஆரம்பித்தது.
டித்வா அனர்த்தம் ஏற்பட்டு 23 நாட்களுக்குப் பின்னர் மலையக பாதையில் ஒரு ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.
இன்று முதல் மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை – அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

