Friday, December 19, 2025 3:53 pm
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
பொறுப்புகளிலிருந்து விலகுவது தன்னுடைய நோக்கமல்ல என்றும் காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும் என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக எமது முன்னோர்களின் தியாகங்களினால் கட்டமைக்கப்பட்ட ஸ்தாபனமாகும்.
தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. அந்த வகையில் ஸ்தாபனத்தை ஜனநாயக முறையில் மேலும் வலுப்படுத்துவதே எமது நோக்கம்.
இதன் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூட்டப்பட்டு தேவையான மாற்றங்கள் குறித்து தீர்மானிக்கப்படும். மேலும், தற்போது கட்சியின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.
வெகு விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.


