Friday, December 19, 2025 12:14 pm
‘பைரன்’ புயல் தாக்கி காசாவில் குளிரால் நடுங்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இப்பகுதியில் கடும் காற்று , கனமழை காரணமாகவும் , இஸ்ரேலிய தாக்குதலின் போது சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாலும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சீரற்ற வானிலை காரணமாக சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன் மழை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக அந்நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பதற்கு வீடுகள் இன்றி கூடாரம் அமைத்து வசித்து வரும்நிலையில் , அதற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து கடும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே அனைத்து விதமான வளங்களிலும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் காசா மக்கள் தற்போது நிலவி வருகின்ற கடும் குளிர் , வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு பல சவால்களை எதிர் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

