Friday, December 19, 2025 11:39 am
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில் , The First Class of the Order of Oman எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நெல்சன் மண்டேலா , எலிசபெத் ராணி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு பிறகு இந்த விருதை பெறும் தலைவர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
ஜோர்டான் , எத்தியோப்பியா , ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு , இரண்டு நாடுகளின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- ஓமன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி சுல்தான் ஹைதம் பின் தாரிக் என்பவரால் சுல்தானகத்தின் தனித்துவமான சிறப்புமிக்க இவ் விருது வழங்கப்பட்டது.
மஸ்கட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது மோடி இந்த விருதைப் பெற்றார்.
மேலும் எத்தியோப்பியா சென்றபோது , மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான கிரேட் ஹானர் ஆப் எத்தியோப்பியா’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த உயரிய கௌரவத்தை, இரு நாடுகளின் தொன்மையான நட்பிற்கும், இந்தியா மற்றும் ஓமன் மக்களின் 140 கோடி பேரின் பரஸ்பர அன்பு, பாசத்திற்கும் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மோடிக்கு கிடைத்த விருதுகளும் , வரவேற்புகளும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

