Friday, December 19, 2025 10:29 am
கௌரவ பிரதமரின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் விசேட பாராளுமன்ற அமர்வின் இரண்டாம் நாள் இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமாகியுள்ளன.
டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதாவது இன்று மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன் , அன்றையதினம் ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ,
மு.ப. 09.30 – மு.ப. 09.45 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 09.45 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் (01 வினா).
மு.ப. 10.00 – பி.ப. 5.30 2026 ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இல. 01 (தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களம்) அங்கீகரிக்கப்படவுள்ளது.

