Thursday, December 18, 2025 4:04 pm
தீப்பரவல் மற்றும் மின்சார கசிவு அபாயங்கள் காரணமாக இங்கிலாந்து முழுவதும் விற்பனை செய்யப்படும் மின்சார போர்வைகளை திரும்பப் பெறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
B&Q நிறுவனத்தால் விற்கப்படும் இந்தப் போர்வைகள் அதிகம் வெப்பமடையக் கூடிய மின்சாரக் கூறுகளைக் கொண்டிருப்பதால் தீ விபத்தினை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாகவுள்ளதாக இங்கிலாந்தின் தயாரிப்பு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்தப் போர்வைகள் 2016 ஆம் ஆண்டின் மின் உபகரண பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் கண்டறியப்பட்டது.
வாடிக்கையாளர்கள் உடனடியாக மின்சார போர்வைகளின் பயன்பாட்டை நிறுத்தி விட்டு, அவற்றை அருகிலுள்ள B&Q நிறுவனத்தின் வர்த்தக நிலையங்களிடம் மீள ஒப்படைத்து அவற்றுக்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் குளிர்காலத்தில் பலர் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான செலவு குறைந்த வழியாக மின்சார போர்வைகளைப் பயன்படுத்தத் தேர்வு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

