Thursday, December 18, 2025 2:51 pm
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் கடந்த 11 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதோடு , இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடைபெறவுள்ள 2026 ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் முடியும் வரை இவரது பதவிக்காலம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , இந்திய தேசிய அணியுடன் 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய அனுபவம் கொண்ட ஸ்ரீதர் , 300க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது நியமனம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீதர் , ” இலங்கை வீரர்கள் எப்போதும் உள்ளுணர்வு திறமை , மீள்தன்மை மற்றும் கூட்டு மனப்பான்மைக்காக பாடுபட்டுள்ளனர். எனது பங்கு ஒரு அமைப்பை திணிப்பதல்ல , மாறாக விளையாட்டுத் திறன் , விழிப்புணர்வு மற்றும் களத்தில் புகழ்ச்சி என்பனவற்றை இயல்பாகவே வீரர்கள் மத்தியில் வளரச் செய்வதாகும் ” என்றார்.
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு ஸ்ரீதர் நியமிக்கப்பட்டமை இலங்கை அணியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக கருதப்படும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

