Thursday, December 18, 2025 10:55 am
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோருக்கான உதவித் தொகையை இன்று வியாழக்கிழமை (18) முதல் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட அஸ்வெசும நலன்புரி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய ,அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு ஏற்கனவே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பயனாளிகள் இன்று (18) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.
மேலும் , இதற்காக அரசாங்கம் 3,081,730,000 ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

