Wednesday, December 17, 2025 4:25 pm
தற்போது தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது .
இந்த சூழலில் தான் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடகு வைத்து மக்கள் கடன் பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியர்கள் வெள்ளியை அடமானமாக வைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற முடியும்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கத்துக்கு நிகராக வெள்ளியும் விலை அதிகரித்து வருகின்றமையாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது எனலாம்.
இதன்படி , தற்போது வெள்ளியையும் அடமானமாக வைத்து கடன் வாங்கலாம் என்பதால் மக்களின் கவனம் இனி தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் மீதும் விழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இனி வரும் காலங்களில் இந்தியாவில் வெள்ளி வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனலாம்.

